நிர்மலா தேவி வெளியே வருகிறார்! உயிருக்கு ஆபத்து என அலரும் மாணவிகள்!

கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.


சிறையில் இருக்கும்போது நிர்மலா தேவியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஒன்று வெளியானது. ஆனால், அது முழுக்க முழுக்க போலீசால் ஜோடிக்கப்பட்டது என்று டென்ஷன் ஆகியிருந்தார் நிர்மலா தேவி. இதுவரை 6 முறை மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

நிர்மலா தேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமி தாண்டி வேறு எவரும் சம்பந்தப்படவில்லை என்று, இதற்கென நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் தீர்ப்பு கொடுத்திருக்கும் நிலையிலும் ஜாமீன் வழங்க தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்தது.

கொலைக்குற்றவாளிக்குக் கூட மூன்று மாதங்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஆனால், ஆடியோ டேப் விவகாரத்தில் கவர்னர் பெயர் அடிபடக்கூடாது என்பதாலே 11 மாதங்கள் சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளாரா நிர்மலா தேவி என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.  இப்போது ஜாமீன் வழங்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

அதே நேரம் சிறையில் இருந்து வெளியே வரும் நிர்மலா தேவி பத்திரிகை, மீடியாக்களை சந்திக்ககூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஏற்கெனவே ஜாமீனில் விடுதலை ஆன நிலையில் இன்று நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே குடும்பத்தாருக்கும் நிர்மலா தேவிக்கும் பிரச்னை நிலவுகிறது. அதனால் அவருக்கு ஆதரவு எப்படியிருக்கும் என்று மக்கள் பலரும் அச்சம் தெரிவிக்கிறார்கள். பெரிய இடத்து விவகாரம் என்பதால், நிர்மலா தேவி இனி சுதந்திரமாக வெளியே இருக்க முடியாது, அவரது உயிருக்கு ஆபத்து இருக்கும் என்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் மாணவிகளும் அலறுகிறார்கள்.

அதனால் நிர்மலா தேவி, சிறையை விட்டு வெளியே வந்தபிறகும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தாலும், சிறையில் இருந்து வியாழன் அன்றுதான் நிர்மலா தேவி வெளியே வருவார் என்று சொல்லப்படுகிறது. உண்மை தெரியும் வரை நிர்மலா தேவிக்கு தண்டனை கூடாது.