திருமணம் செய்வதாக கூறியதால் நெருங்கி பழகினேன்..! ஆனால்? மாமன் மகனால் சடலமாக தொங்கிய சினேகா..! உசிலம்பட்டி அதிர்ச்சி!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட துரைசாமிபுரம் என்ற பகுதிக்கு அருகேயுள்ள புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனின் மகளின் பெயர் சினேகா. இவருக்கு அடுத்த வியாழக்கிழமை அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களுக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு சினேகா சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அப்போது தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சினேகா மரத்தில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்தோர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 

விசாரணையின் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது  சினேகா  கைப்பட எழுதியிருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், சினேகா தன்னுடைய உறவினரான கோபிநாத் என்பவரை காதலித்து வந்ததாக எழுதியுள்ளார். நிச்சயமாக திருமணம் செய்துகொள்வதாக கோபிநாத் வாக்குறுதி அளித்ததால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

எனக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, கோபிநாத்தை உடனடியாக தன்னை திருமணம் செய்து   கொள்ளுமாறு சினேகா வற்புறுத்தியுள்ளார். ஆனால் கோபிநாத் தன்னுடைய பெற்றோரின் பேச்சை கேட்டு அதனை மறுத்துள்ளார். இதனால் தன்னுடைய தற்கொலை முடிவிற்கு கோபிநாத் மற்றும் அவருடைய பெற்றோரே காரணம் என்று எழுதிவைத்து இறந்துள்ளார். 

காவல்துறையினர் கோபிநாத் மற்றும் அவருடைய பெற்றோரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.