அடுத்த வாரம் கல்யாணத்தை வைத்துக் கொண்டு இப்படி செஞ்சிட்டாளே? உறவுகளை கதற வைத்த சினேகா! உசிலம்பட்டியில் நடந்தது என்ன?

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட துரைசாமிபுரம் என்ற பகுதிக்கு அருகேயுள்ள புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனின் மகளின் பெயர் சினேகா. இவருக்கு அடுத்த வியாழக்கிழமை அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களுக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு சினேகா சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அப்போது தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சினேகா மரத்தில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்தோர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.