மாணவிகள் டைட்டா டிரஸ் போட்டு தான் அருவியில் குளிக்கனும்! பேராசிரியர்களின் கல்வி சுற்றுலா லீலைகள்!

தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வக்கிர அத்துமீறல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் புகார்களின் வரிசையில் தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி விவகாரமும் வெடிகுண்டாக வெடித்திருக்கிறது.


கொஞ்சம் தமதமாக வெளியே வந்தாலும் வந்தாலும் விவகாரத்தில் அனல் பறந்துகொண்டிருக்கிறது. விலங்கியல் துறையை சேர்ந்த நாற்பத்தாறு மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக கடந்த ஜனவரி மாதமாக கர்நாடக மாநிலத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

அவர்களை அழைத்துச் சென்ற பேராசிரியர்களான ரவீண், சாமுவேல் டென்னிசன் ஆகியோரின் சுயரூபம் அங்கு சென்ற பிறகுதான் தெரியவந்ததாக மாணவிகள் கூறுகின்றனர். பேராசிரியர் ரவீண், சில மாணவிகளை தவறான இடங்களில் தொட்டதாகவும், பேருந்தில் ஒரு மாணவியை தனது மடியில் உட்கார கட்டாயப் படுத்தி அதனை நிறைவேற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். 

மாணவிகளின் பின்புறத்தில் தட்டுவது இரவில் மாணவிகளின் அறைக்குள் வந்து ஆபாச ஜோக்குக்ள் சொல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும், இரவில் தங்கள் அறையிலேயே படுக்க முயன்ற அவர்களை மாணவிகள் போராடி வெளியில் அனுப்பியதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். 

அருவியில குளிக்கச் சென்ற போது மாணவிகளை இறுக்கமான ஆடைகலைல் அணிய கட்டாயப் படுத்தியதாகவும் அவர்கள் கூறினர். தங்கள் தேர்வு மதிப்பெண்களில் கைவிடுவதாக அவர்கள் மிரட்டி வந்ததால் தாங்கள் அஞ்சி வந்ததாகவும் அவர்கள் கூறினர். 

சுற்றுலா முடிந்து திரும்பியபோது கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசனிடம் புகார் அளித்த நிலையில் அவர் தங்கள் துறையின் தலைவரான மோசஸ் இன்பராஜிடம் விவகாரத்தை ஒப்படைக்க அவர் தங்களை கேவலப்படுத்தி அனுப்பி விட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். 

தாங்கள் தொடர்ந்து போராடியதால் டீன் விஜயகுமாரி தலைமையில் பெண் வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆனால் இதுவரை அறிக்கை சம்ர்ப்பிக்கப்படவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர். 

வெளி  நபர்களைக் கொண்டு மாணவிகளின் குடும்பங்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகவும் ஆனால் தாங்கள் அஞ்சவில்லை என்றும் கூறும் மாணவிகள் வரும் 25-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஆதாரங்களுடன் காவல்துறையையும், ஊடகங்களையும் சந்திக்கப் போவதாகவும், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.