பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் விபச்சாரம்! புரோக்கராகும் சகோதரன்! இப்படியும் ஒரு கிராமம்! எங்கு தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பஞ்சடா பழங்குடியினப் பெண்கள் தான் குடும்பங்களில் பொருளீட்டும் உறுப்பினர்கள். தொழில் என்ன தெரியுமா பாலியல்.


மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமச் - மன்சார் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும்போது சில இடங்களில் சாலையோரங்களில் சிறுமிகளும் இளம் பெண்களும் அளவுக்கு அதிகமான அலங்காரங்களுடன் சாலையில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. 

உரிய வாடிக்கையாளர்களைப் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவர்கள். சில நேரங்களில் லாரி ஓட்டுநர்கள், சில நேரங்களில் அருகில் உள்ள் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். நீமச், ரட்லம், மாண்ட்சர் உள்ளிட்ட இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்காக எந்தவித குற்ற உணர்வும் இன்றி பாலியலை குடும்பத் தொழிலாக நடத்துவது தொன்று தொட்ட சமூக வழக்கமாக உள்ளது.

இந்த சமூகக் குடும்பங்களில் பெண்கள் பிறந்தால் வருமானத்துக்கான கூடுதல் உறுப்பினர்கள் வந்து விட்டதாக கருதி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை பெண்குழந்தைகளை 12 முதல் 14க்கு இடைப்பட்ட வயது முதல் பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தத் தொடங்கிவிடுகின்றனர்.

இதனால் இந்த கிராமங்களில் முறைகேடாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சமூக ஒப்புதலுடன் நடைபெறும் பாலியல் தொழிலைப் போன்றே இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒபியம் போதைப் பொருளை விளைவிக்கும் தொழிலையும் மேற்கொண்டுள்ளனர். 3 மாவட்டங்களில் உள்ள 75 கிராமங்களில் 23 ஆயிரத்துக்கும் அதிகமாக பஞ்சடா பழங்குடியினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் இருமடங்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள இவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் சட்டவிரோதமாக பெண்களை விலைக்கு வாங்குவதும் தெரிய வந்துள்ளது.