மத்திய பிரதேசத்தில் திருமணம் நடைபெற ஒருமணிநேரமே உள்ள நிலையில் மணமகன் திடீரென ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது அவரை பிடிக்க உறவினர்களும் ஓடிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டில் இருந்து திருமண மண்டபம் வரை 11கிமீ வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த மாப்பிள்ளை! பார்த்து அதிர்ந்த மணப்பெண்! பகீர் காரணம்!
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த நீரஜ் மால்வியா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து திருமண மண்டபம் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நேற்று திருமண மண்படத்திற்கு வீட்டில் இருந்து புறப்பட்ட நீரஜ் அலங்கார வளைவுகளுடன் இருந்த வரவேற்பு காரில் பயணம் செய்யவில்லை.
அதற்கு மாறாக திருமண மண்டபத்தை நோக்கி ஓடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓடிப்போகிறாரோ என்ற பயத்தில் அவர் பின்னாலேயே ஓடத் தொடங்கினர். அவரும் நின்றபாடில்லை. அவர் பின்னாலேயே அனைவரும் மூச்சிறைக்க ஓடத் தொடங்கினர். சாலையில் பார்த்த பொதுமக்கள் அவர் ஏதாவது திருடிச் செல்கிறாரா என்று பார்த்தனர். மணமகன் கோலத்தில் ஒரு இளைஞர் ஓடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடைசியில் திருமணம் மண்டபம் வந்து சேர்ந்தார் மணமகன். இதன் பின்னர்தான் அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.
மணமகன் உடற்பயிற்சியாளர் என்பதால் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தவே வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்ததாக கூறியதை கண்டு அனைவரும் வியந்தனர். பின்னர் திருமணம் இனிதே நடைபெற்றது. வழக்கமாக எல்லோரும் சொல்வது போல் மணமகன் பிரச்சாரம் செய்திருந்தால் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பர்.
ஆனால் திருமணத்தின்போது இப்படி ஒரு வித்தியாசமாக சொன்னதால் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.