அது என் பர்சனல்..! கணவனை பிரிந்து தனிமையில் வசிப்பது குறித்து மதுவந்தினி சொன்ன சீக்ரெட்!

பிரபல பழங்கால நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் மகள் நடிகை மதுவந்தி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பழம்பெரும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தி ஆவார். மேடை நாடக இயக்குனராக இருந்து வந்த மதுவந்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த தர்மதுரை திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடம்பன் , சிவலிங்கா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான தாராளப் பிரபு படத்தில் நடித்திருந்தார். பிரபல பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் அருண் குமார் என்பவரை மதுவந்தி திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுவந்தியின் குடும்பம் பிரபல கல்வி நிறுவனத்தை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. திருமணத்துக்கு பிறகும் மதுவந்தியும் அவரது கணவர் அருணும் இணைந்து புதிய கல்வி நிறுவனத்தை சிறப்பாக இயக்கி வந்தார்கள். அதேபோல மதுவந்தி மேடை டிராமா, சீரியல் மற்றும் சினிமா போன்றவற்றில் நடிக்க விருப்பம் காட்டினார். இவையெல்லாவற்றுக்கும் அவரது கணவர் அருண்குமார் ஒத்துழைப்பு வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியது. பின்னர் இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து நீதிமன்றத்தில் விண்ணப்பித்தால் தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு கொரோனா பிரச்சனையால் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி மதுவந்தியிடம் கேட்டபோது இது என்னோட பர்சனல் விஷயம். நாங்கள் இருவரும் மீட்சுவலாக பிரிய முடிவெடுத்து விவாகரத்து பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பித்து உள்ளோம். வெளியில் ஏன் இதைப் பற்றி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.