பரபரப்பான ஆட்டத்தில் திரில் வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி !

பரபரப்பான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது .


டாஸ் வென்ற காரைக்குடி காளை அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர் .மதுரை பாந்தர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் காரைக்குடி காளை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர் .

இதனால் காரைக்குடி காளை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது . மதுரை அணியின்  கிரன் ஆகாஷ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மதுரை அணியும்  தொடக்கம் முதலே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்து வந்தது.எனினும் 18.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை மதுரை அணி எட்டியது . இதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.