துப்புரவு பணிக்காக விண்ணப்பித்த எம்.எஸ்.சி பட்டதாரி தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி ஆணை வழங்கியுள்ளார்.
குப்பை அள்ளும் துப்புரவு பணியில் சேர்ந்தார் எம்எஸ்சி மாணவி! கோவை மாநகராட்சி பரிதாபம்!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 120 வார்டுகள் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,520 பேர் நிரந்திர துப்புரவு பணியாளர்களாகவும், 2,300 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். மேலும் 549 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
549 பணியிடங்களுக்கு கிட்டதட்ட 7,300 பேர் விண்ணப்பம் மேற்கொண்டனர். பி.இ, பி.எஸ்.சி, பி.காம் பட்டதாரிகள் பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் நேர்காணலுக்கு அடைக்கப்பட்டனர். அவர்கள் 5, 200 பேர் மட்டுமே நேரில் வந்தனர்.
இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு நேர்காணல் நடைப்பெற்றது. 321 பேர் நேர்காணலின் முடிவில் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேற்று குனியமுத்தூரில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான எம்.எஸ்.சி பட்டதாரியான மோனிகா என்ற இளம்பெண் துப்புரவு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் கேட்டறிந்த போது, "நான் எம்.எஸ்.சி படித்துக்கொண்டிருக்கிறேன். மாநகராட்சியில் துப்புரவு பணி செய்வதற்காக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. உடனடியாக பணிக்கு விண்ணப்பம் செய்தேன். பட்டதாரி என்பதால் துப்புரவு பணி செய்ய இயலாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. வேலை கிடைத்தது என்பதை கேட்டறிந்த உடல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்" என்று கூறியுள்ளார்.