தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகப் போகும் தமிழ்நாட்டு இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:


நாட்டின் 17 மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் நிறைவடைகிறது. மகாராஷ்டிரம், ஒதிசா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதியும்,

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, அசாம், பீகார், சத்திஸ்கர், குசராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், சார்க்கண்டு, மத்தியபிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களுக்கு ஏப்.9 -ம் தேதியும், மேகாலயாவின் வான்சுக் சீமுக்கு ஏப்.12ஆம் தேதியும் பதவிக்காலம் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ், திருச்சி சிவா, எஸ்.முத்துக்கருப்பன், ரங்கராஜன், விஜிலா சத்தியானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.