நீ மூன்றாம் தர பொம்பளை! ஜோதிமணியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பாஜக பிரமுகர்! லைவ் டிவி டிபேட்டில் நடந்தது என்ன? வைரல் வீடியோ உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை மூன்றாந்தர பெண்மணி என்று பாஜகவின் கரு. நாகராஜன் பேசியதால் உடனடியாக ஜோதிமணி விவாதத்தில் இருந்து வெளியேறினார்.


இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த எம்பி ஜோதிமணி நியூஸ்7 விவாதத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் கரு.நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதனின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பாஜகவின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நின்று எதிர்கொள்வேன். உங்கள் மகத்தான அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய விவாதத்தின் தரத்தை கரு. நாகராஜன் சிதைத்த பிறகும்கூட அந்த தொலைக்காட்சி அவருக்கு பேச அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. பொது வாழ்வை உண்மை, நேர்மை ,அன்பின் வழியே வாழும் ஒரு தவமென உணர்கிறேன். உங்கள் மலிவான விமர்சனங்களுக்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும் நான் உறுதியோடு பயணிப்பேன் எனவும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

அதனால்தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள். எனது வெற்றியை தனது குடும்பப் பெண் ஒருத்தியின் வெற்றி என கருதி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்தார்கள். இந்த வெற்றி என்னுடையதல்ல . சாமானிய மக்களின் வெற்றி என நான் உணர்கிறேன்.

ஒரு பெண்ணை அவரின் கேரக்டரை சிதைப்பதன் மூலம் அவரை பொது வெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் பாஜக என்னைக்குமேயானால் அவர்களின் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றி அடையாது. எனது நேர்மையும் துணிச்சலும் உலகறியும் எனவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். இதில் அசிங்கப்பட வேண்டியது பிஜேபி தான் என்று வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பாஜகவின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். இதனைக் கண்ட தமிழகமே அதிர்ந்தது. லட்சக்கணக்கான பார்வையாளர்களால் டிரண்ட் செய்யப்பட்டது. அன்றும் பாஜக பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது.

பாஜக என்னிடம் ஆபாசமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பணமதிப்பிழப்பு விவகாரத்தில் பாஜகவையும் மோடி அவர்களையும் தோலுரித்தேன்‌ என்பதால் என்னை ஒரு வாட்ஸப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள் எனவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நாகரிக அரசியலை முறையாக கற்றுக் கொள்ளும் வரை பாஜகவினர் கலந்துகொள்ளும் எந்தவித விவாதங்களிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.