வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரித்தீஷ் மறைவு செய்தி கேட்டு திரையுலகமே கலங்குகிறது.
நடித்தது மூன்றே படங்கள்! ஆனால் ஒட்டு மொத்த திரையுலகமும் கலங்குகிறது! யார் இந்த ரித்தீஸ்?

ரித்தீஷ்க்கு வயது வெறும் 44 தான். இலங்கை கண்டியில் 1973 ல் மார்ச் 5ல் பிறந்தார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்துள்ளார். 2009ல் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
முகஅழகிரிக்கு ரித்தீஷ் மிகவும் நெருக்கமாக இருந்தார். அழகிதி திமுகவில் ஓரம் கட்டப்பட்ட பிறகு அதிமுகவில் ஐக்கியமானார். தொடர்ந்து சசிகலாவிற்கு ஆதரவாளராக இருந்து பின்னர் எடப்பாடி தரப்புக்கு தாவினார் ரித்தீஷ். தேர்தல் பணிகளில் இவரை ஸ்பெசலிஸ்ட் என்று கூறுவார்கள்.
ஆர்கேநகரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அங்கு இவருக்கு ஒரு ஏரியாவை ஒதுக்கி கொடுத்திருந்தார்கள். அந்த ஏரியாவில் தான் ஜெயலலிதாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இதனை அடுத்து ரித்தீஷை ஜெயலலிதா நேரடியாக அழைத்து பாராட்டினார். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் - ராதாரவியை வீழ்த்த விஷாலுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர் இவர் தான்.
நாடக நடிகர்கள் ஒட்டு மொத்தமாக ராதாரவிக்கு ஆதரவாக இருந்த நிலையில் அதனை உடைத்து விஷால் தரப்புக்கு வாக்குகளை பெற்று அவர்களை ஜெயிக்க வைத்தார். சென்னையில் வசித்து வரும் ரித்தீஸ், தற்போது கூட தேர்தல் பணியாற்ற தான் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி அருகே போகலூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
ஜே.கே.ரித்திஷ், இவர் நடிகர், அரசியல்வாதி என்பதையும் தாண்டி ஜல்லிக்கட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டினை மீட்டெடுப்பதற்காக 2009-ம் ஆண்டில் இருந்து உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்த ஜல்லிக்கட்டு அமைப்பினருக்கு துணை நின்றவர்களுள் முக்கியமானவர்.
வெறும் ஐந்து படங்களில் மட்டும் தான் ரித்திஷ் நடித்துள்ளார். ஆனால் இவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ந்துள்ளது. அதற்கு காரணம் இவரது கை கொடுத்து கொடுத்து சிவந்த கை. உதவி என்று யார் சென்றாலும் தன்னால் முடிந்ததை செய்துவிடுவார். நம்பர் 2 பிசினஸ் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும் நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்க கூடியவர்.