உங்களுக்கு எல்லாம் பீச்சாங்கை தான்..! ஸ்மிருதி இரானி செய்த செயல்! கேவலப்பட்டுப்போன திருமாவளவன் கட்சி எம்பி!

விடுதலை சிறுத்தை கட்சியியை சேர்ந்த எம்.பி ரவிக்குமார், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை சந்தித்து மனு வழங்கியபோது, அதனை அவர் மோசமான முகபாவனைகள் உடன் பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த விழுப்புரம் மாவட்ட தொகுதி எம்.பி.ரவிக்குமார் ஆவார். இவர் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2013ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய பெண்கள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களை நேரில் சந்தித்து மனுவை அளித்தார். 

எம்.பி.ரவிகுமார் அந்த மனுவை அமைச்சரிடம் வழங்கியபோது அவரின் அலட்சிய போக்கு கண்ணுக்கு நேராக தெரிந்தது. அவை எதையும் கருத்தில் கொள்ளாமல் ரவிக்குமார் சிரித்துக்கொண்டே அந்த மனுவை அமைச்சரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை பண்பு கூட இல்லையா என்று அமைச்சர் ஸ்மிருதி இராணியை பார்த்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் ஒரு எம்பி மனுவை கொடுக்கும் போது அதை ஒற்கைக் கையில் அதுவும் இடதுகையில் வாங்கியதோடு போட்டோவிற்கு போசும் கொடுத்துள்ளார் ஸ்ருதி. போதாக்குறைக்கு விசிக எம்பியும் சிரித்துக் கொண்டே இதனை கொடுத்தது தான் வேடிக்கை.