யாரா இருந்தா என்ன? ஜீப்பில் ஏறுடா..! போலீஸ் வாகனத்தில் ஏற்பட்ட அதிமுக எம்எல்ஏ மகன்..! கோவை சம்பவம்! பரபர பின்னணி!

கடையை நீண்ட நேரம் திறந்து வைத்த காரணத்திற்காக சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அருண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வடக்கு மாநகர மாவட்ட செயலாளராகவும் அதிமுகவில் பதவி வகிக்கிறார். இவருக்கு தீரஜ ராம கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவருக்கு சொந்தமாக வடவள்ளி மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்படி அனைத்து கடைகளும் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி கிடைத்துள்ளது. நேற்று இரவு  தீரஜ் ராமகிருஷ்ணா ஐந்து நிமிடங்கள் கடையை அதிகமாக திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி காவல்துறையினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிப்போனதால் அவரை கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து அருண்குமார் அவர்கள் கூறுகையில், "நேற்றிரவு என்னுடைய மகன் 7:05 மணிக்கு கால் செய்தான். அப்போது அவன் கடையை சீக்கிரம் அடைக்ககூறி காவல்துறையினர் தொந்தரவு செய்து வருவதாக கூறினான். கடைக்குள் ஆட்கள் இருந்த காரணத்தினால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையை மூடுவதாக காவல்துறையினரிடம் கூறிய பிறகும் அவர்கள் என்னுடைய மகனுக்கு செவிசாய்க்கவில்லை. நடுரோட்டில் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் என்னுடைய மகனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். என் மகன் மீது தவறு இருப்பது உண்மையாக இருப்பின் நான் பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக உள்ளேன்" என்று வெகுண்டெழுந்து கூறினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் வினவிய போது, "கடை திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு கடை செயல்பட்டதால் நாங்கள் அவரிடம் முறையிட்டோம். ஆனால் அவர் எங்களுடன் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றி ஏதாவது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர் ஒருவர் கடைக்குள் இருந்தார். ஆனால் அவருக்கும் கிடைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று பொத்தாம் பொதுவாக பதில் கூறினார்.

சிறிது நேரத்தில் சம்பவத்தின் வீரியம் அதிகரிக்கவே அருண்குமாரின் மகனை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.