பிரசாந்த் கிஷோரை கூட்டிட்டு வர்றது தப்பா, சரியா? ஸ்டாலினை பாராட்டும் தி.மு.க.

முந்தைய தேர்தல் வரையிலும் வெற்றிபெறும் கட்சிக்கும் தோல்வி அடையும் கட்சிக்குமான வித்தியாசம் குறைந்தது 10% இருக்கும். ஆனால், கடந்த தேர்தலில் இது 1% மட்டும்தான். ஆகவே, இப்போது உண்மையிலே தெளிவாக திட்டம் போட்டால்தான் ஜெயிக்க முடியும். அதனால்தான் பிரசாந்த் கிஷோர் அழைக்கப்பட்டார் என்று சொல்கிறார்கள்.


தி.மு.க.வின் வெற்றிக் கூட்டணியை குலைக்க இப்போதே பல முயற்சிகள் நடந்து வருகிறது. அதிலும் சென்ற தேர்தலில் திடீரென உருவான ம.ந.கூ ஏற்படுத்திய சேதம் இன்னமும் மாநிலத்தின் தனித்தன்மையையே சிதைக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ரஜினி வருவதாக சொல்லியிருக்கிறார். கமல் ஏற்கனவே புதியதாக களத்தில் இருக்கிறார். சொல்ல முடியாது., தேர்தல் என்பதால் விஷால் கூட களமிறங்க வாய்ப்பிருக்கிறது.  

எம்ஜிஆர் போல முதல் வாய்ப்பிலேயே முதலமைச்சராக எண்ணி களம் இறங்குபவர்கள் அதற்குத் தேவையான 40% வாக்குகளை பெறவேண்டும். அதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், அவர்கள் பெறப்போகும் எந்தவொரு சதவீதமும் (எனது கணிப்பு 8-9%) தமிழக ஆளும் கட்சியை நிச்சயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்ககூடும். ஒருவேளை இதுவேகூட திமுகவின் வெற்றியை தடுப்பதற்கான, கலைப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்கக் கூடும். மேலும்,

கூட்டணிகள் வேற இருக்கும். சீட்டுகளைக் கலைத்துப் போட்டு அடுக்குவதைப் போல இந்தத் தேர்தலிலும் புதிய கூட்டணிகள் உருவாகும். நரி, பரியுடனும், பரி, எலியுடனும், எலி, புலியுடனும் சேருவார்கள். சினிமாவில் 30 ஆண்டுகாலம் நேரெதிராக மோதிய கமலும், ரஜினியும் அரசியலில் கூட்டணி அமைக்கலாம் என

பேசப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தனது முழு சக்தியையும் பிரயோகித்து தன் பங்குக்கு சில பல முயற்சிகளை மேற்கொள்ளும். இடையா சாதி, மதக் கணக்குகள் வேறு., வேட்பாளர் தேர்வு மிக, மிக முக்கியமான காரணியாக இருக்கும். இந்தச் சூழலில் சென்ற முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட திமுக

எந்தவொரு சிறிய ஓட்டைகளையும் விடாமல் தேர்தல் யுத்தியை அமைக்க வேண்டியிருக்கிறது. 100 எம்.எல்.ஏக்களை வைத்திருந்து என்ன பயன்? மாநில சட்டமன்றத்தில் நீட், சி.ஏ.ஏ எதிர்ப்புத் தீர்மானத்தை கூட கொண்டு வர முடியாத நிலைதானே உள்ளது. இந்த இழிநிலை மாற வேண்டுமானால் தனித்த மெஜாரிட்டியை பெற்றே தீரவேண்டும். அதற்கு திமுகவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, கூட்டணிக் கணக்குகளை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து பரிந்துரைக்க (சென்றமுறை கோட்டைவிட்ட இடம் இதுதானே!), வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காண உதவ, எல்லாவற்றுக்கும் மேலாக விர்ச்சுவல் உலகமான சோஷியல் மீடியாவில் கட்சியின் தடத்தை தெளிவாகப் பதிக்க, அநியாயத்துக்கு ஏவப்படும் அவதூறுகளை சமாளிக்க ஒரு தொழில்முறை ஆலோசனை தேவைப்படுகிறது. இது இந்தக் கால அரசியல் சூழலுக்கு, வெற்றிக்குத் தேவை. இப்படியான ஆலோசனையால்தான் காங்கிரஸை வீழ்த்தி மோடியால் பிரதமராக முடிந்தது. பஞ்சாபில் காங்கிரஸ், பீஹாரில் நிதிஷ்,

ஆந்திராவில் ஜகன்மோகன் என பலரும் பணம் கொடுத்துப் பெற்ற இந்தத் தொழில்முறை தேர்தல் பிரச்சார ஆலோசனையும் வெற்றிக்கு உதவியது. அதே வழித்தடத்தில், திமுக தலைவரும் அதே நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

. பிரஷாந்த் கிஷோர் பல மாநிலங்களில், குறிப்பாக பல கட்சிகள்,பல கூட்டணிகள் கொண்ட மாநிலங்களில் மிகச் சரியான கூட்டணியை உருவாக்கி, அசாத்திய வெற்றிகளை சாத்தியமாக்க உதவியுள்ளர். அவருடைய ஆலோசனைகளும் இப்போது தேவையானதுதான் என்கிறார்கள்.

உண்மையா என்பதை தி.மு.க.வினர்தான் சொல்லவேண்டும்.