தினகரன் பாதையில் ஸ்டாலின்! நம்பிக்கை இழந்த நிர்வாகிகள்! டென்சனில் உடன்பிறப்புகள்!

முழு மெஜாரிட்டியுடன் இருந்த எம்.ஜி.ஆர். அரசை மத்திய அரசு துணை கொண்டும், தொங்கிக்கொண்டிருந்த ஜானகி அரசை புத்திசாலித்தனத்தாலும் தூக்கி எறிந்தவர் கருணாநிதி.


ஆனால், அவருக்குப் பிறந்த ஸ்டாலினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார்கள் கட்சியின் உடன்பிறப்புகள்.

தப்புத்தப்பா முடிவெடுக்கிறதும், குழப்புறதும்தான் ஸ்டாலின் வேலையா இருக்குதுங்க. மூணு எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தேவையில்லாம அவசரப்பட்டு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குடுத்தாங்க. இன்னும் பத்து எம்.எல்.ஏ இருந்தா, தீர்மானத்தை ஜெயிச்சுடலாம். அப்படி ஜெயிச்சுட்டா, ஆட்சியில் இருக்க அதிகாரம் இல்லைன்னு கவர்னர்கிட்டே புகார் கொடுத்து பிரச்னையை பெரிதாக்கலாம்.

இதுக்காக 12 எம்.எல்.ஏக்களை பிடிச்சுட்டாங்க, எல்லாம் நல்லபடியா முடியப்போகுதுன்னு நினைச்சோம். ஆனா, திடீர்னு இந்த நேரத்துல அது தேவையில்ல்லைன்னு வாபஸ் வாங்கிட்டார் ஸ்டாலின்.

சரிதான், பிள்ளையார் பிடிக்க நினைச்சு குரங்கா முடிஞ்சிடுச்சுன்னு ஸ்டாலின் புத்திசாலித்தனமா பின் வாங்கிட்டாருன்னு நினைச்சோம். ஆனா, இப்போ என்னடான்னா, பின் வாங்குனதுக்குக் காரணம், பாயுறதுக்குத்தான் என்கிறார். ஆட்சியைக் கலைக்கமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் ஸ்டாலின் எங்கே போய் பாயப்போறாராம்?

இப்படித்தான் சும்மா இல்லாமல், வாய்க்கு வர்றதை எல்லாம் பேசி பெரிய மனுஷன் மாதிரி தினகரன் ஆடிக்கிட்டு இருந்தார். நாளைக்கு ஆட்சி போயிடும், ஒரு மாசத்துல போயிடும்னு சொல்லிக்கிட்டு இருந்தார் இப்போ, அவருக்குத்தான் நிலமை சரியில்லாம போயிடுச்சு. அதனால், ஸ்டாலின் அமைதி காக்கவேண்டிய நேரம் இது என்கிறார்கள்.

ஓஎம்.ஜி. குரூப் ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.