சண்ட செய்வோம் பாடகருக்கு ஸ்டாலின் ஆதரவு..! இனிமே தி.மு.க. மேடையில் பாட்டு பாடுவாங்களோ!

சமீபத்தில் இணையத்தைக் கலக்கும் வகையில் ஒரு ராப் பாடல் வைரலானது. அது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சண்ட செய்வோம் என்ற பாடல். இந்த பாடலை தெருக்குரல் அறிவு என்பவர் பாடியிருந்தார்.


இவர் தனது சண்ட செய்வோம் பாடலை, வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய இந்த பாடலை இணையதளம் வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்து ரசித்தாராம் 

உடனடியாக அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் அழைத்துவரச்சொல்லி, தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஓராண்டு முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாகவும் இளைஞர் அறிவு தனது கையொப்பத்தை பதிவு செய்தார். பின்னர் பேசிய அறிவு என்னுடைய பாடல் தமிழகம் முழுவதும் பார்த்து ரசித்து இருந்தாலும் ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் தன்னை அழைத்து பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.