அதிமுகவிடம் அமித்ஷா சேட்டிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டதாக மு க ஸ்டாலின் செம்மையாக கலாய்த்துள்ளார்.
அமித்ஷா சேட்டிடம் அதிமுக அடகில் இருக்கிறது! எடப்பாடியை பங்கம் பண்ணிய ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது மு க ஸ்டாலின் பேசியதாவது.. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது. அதிமுக தொடர்பான முடிவுகள் கூட தற்போது டெல்லியில் தான் எடுக்கப்படுகிறது.
ஜெயலலிதா எம்ஜிஆர் போன்றவர்களுக்கு தற்போது அதிமுகவில் மரியாதை கிடையாது. அமித்ஷா பிரதமர் மோடி போன்றவர்களுக்குத்தான் அதிமுகவில் தற்போது மரியாதை இருக்கிறது.
கடந்த தேர்தலில் மோடியால் லேடியா என்று பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் இந்தத் தேர்தலில் மோடிக்கு வாக்கு சேகரித்து கொண்டிருக்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுக இப்போது சாதாரண ஒரு ஆளிடம் அடகில் இல்லை. அமித் ஷாவிடம் அடைகள் இருக்கிறது. அவரிடமிருந்து அடகு வைத்து மீட்க முடியுமா?
இவ்வாறு பேசி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டாலின் செம்மையாக கலாய்த்துள்ளார்.