கொரோனா கோரதாண்டவம்! 1000க்கும் மேற்பட்டோர் மரணம்..? ஜூலை மாதத்தில் என்னவாகும் சென்னை மாநகரம்..?

சென்னையில் ஜூலை மாத தொடக்கத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் மரணிப்பார்கள் என்று ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில்தான் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி வரும் கொரோனா பாதிப்புகளில் 70% வரை சென்னையிலேயே பதிவாகின்றன. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் 78% பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் சென்னையில் மட்டுமே சுமார் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்றும் சென்னையில் மட்டும் 1600 பேர் வரை மரணிப்பார்கள் எனவும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் ஜூன் மூன்றாம் தேதி வரை சென்னையில் 17,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் எனவும், 156 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் மரணிப்பார்கள் எனவும் அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி கிட்டத்தட்ட சென்னையில் ஜூன் மூன்றாம் தேதி வரை 17598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 153 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

அதே ஆய்வில் இந்த மாதம் 30ம் தேதி வரை தமிழகத்தில் 1.30 லட்சம் வரை கொரோனா பாதிப்புகள் இருக்கும் எனவும் , 769 பேர் வரை தமிழகத்தில் மரணிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.