வாக்களிக்க பெரும் கூட்டமாக புறப்பட்ட இளைஞர்கள்! தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்!

கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டம் - போலீஸ் தடியடி


சென்னை, கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ,பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாமல் பேருந்தில் பயணம் வந்த வந்தவர்களுக்கு, சொந்த ஊர் செல்ல பேருந்து கிடைக்கவில்லை என கூறி பயணிகள் பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

காவல்துறை தரப்பில் பயணிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இருந்தும் பயணிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ஒரு கீ.மீ தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.தொடர் விடுமுறையையொட்டி தமிழக அரசு தரப்பில் வழக்கத்தை விட கூடுதலாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்