மேடையில் ஒய்யாட பூனை நடை..! நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்த MBA மாணவி! நொடியில் நிகழ்ந்த விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரு: ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் உள்ள பீன்யா பகுதியில் செயல்படும் தனியார் காலேஜ் ஒன்றில் எம்பிஏ படித்து வந்தவர் ஷாலினி (21 வயது). இவரது காலேஜில், ஃபிரஷர்ஸ் டே கொண்டாட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி, அங்கு படிப்பவர்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஒத்திகை செய்து வந்திருக்கிறார்கள்.  

இதில், மாணவி ஷாலினி, ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஷாலினிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, அப்படியே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். இதைப் பார்த்ததும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி காலேஜ் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.