மாடல் அழகி என்று நம்பி சென்ற தொழில் அதிபர்! பூட்டிய அறைக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி!

மும்பையில் பெண் போல நடித்து பணப்பறிப்பு செய்த எம்பிஏ பட்டதாரி கைது செய்யப்பட்டார்.


இதுதொடர்பாக, மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு கம்பெனியின் இயக்குனர் கிரைம் பிராஞ்ச் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதாவது, அகமது சாம்சூல் ஹக் என்ற 32 வயதான நபரை மும்பையின் புறநகர்ப்பகுதியில் ச்மீபத்தில் சந்தித்ததாகவும், அவர் முன்னணி சினிமா மாடல் அழகிகளுடன் தனக்கு தொடர்பு உள்ளதாகவும் தன்னிடம் தெரிவித்தார். இதன்பேரில், மாடல் அழகிகள் மீது ஆசை கொண்ட எனக்கு, சில மாடல் அழகிகளை கூட்டிக் கொடுப்பதாக, சாம்சூல் தெரிவித்தார். 

இதையடுத்து, முகம் தெரியாத சில பெண்கள் எனக்கு வாட்ஸ்ஆப் மூலமாக சாட் செய்ய தொடங்கினார்கள். அப்படி 2 பெண்கள், மிகவும் நெருக்கமானதுடன், அவர்கள் எனது அரைநிர்வாண புகைப்படங்களையும் வாங்கிக் கொண்டனர். அதன்பேரில், என்னை பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர்.

இவர்களின் பிரதிநிதியாக ஹக் நேரில் வந்து, ரூ.8 லட்சம் பணமும் வாங்கிச் சென்றார். பின்னர்தான் தெரிந்தது, மாடல் அழகிகள் போல, சாம்சூக் ஹக்கே வேஷம் போட்டு என்னிடம் இருந்து பணம் கறந்தார் என்று. எனவே, அவரை கைது செய் ய வேண்டுகிறேன்,என்று தனது புகாரில் அந்த தொழிலதிபர் குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், குறிப்பிட்ட சாம்சூல் ஹக்கை கைது செய்தனர்.