தினமும் சாலை ஓர டிஃபன் கடை நடத்தும் எம்பிஏ பட்டதாரி தம்பதி! நெகிழ வைக்கும் காரணம்!

வீட்டில் வேலை செய்த பணி பெண்ணுக்காக தள்ளுவண்டி கடை நடத்தி உதவி செய்துவரும் எம்பிஏ பட்டதாரிகளுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


மும்பையில் கடந்த புதன்கிழமையன்று காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், உணவு கிடைப்பது திண்டாட்டமாக இருந்தது. உணவைத் தேடிக் கொண்டிருந்த தீபாளி எனும் இளம்பெண் கண்டிவாலி ரயில் நிலையம் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடையில் உணவு இருந்ததை அடுத்து அங்கு சாப்பிட்டுள்ளார். 

முதலில் வாங்கிய உப்புமா நன்றாக இருந்ததால், மற்ற உணவுகளையும் சாப்பிட்டு பார்த்து பிடித்துப் போனதால் இந்த கடையை நடத்தி வந்த எம்பிஏ பட்டதாரி தம்பதிகளிடம் பேச்சுக் கொடுத்தார். 

அப்போது அவர்கள் கூறிய தகவல் தீபாளியை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது, அந்த கடையை எம்பிஏ பட்டதாரிகளின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் நடத்தி வந்ததாகவும் அவருக்கு தற்போது பக்கவாதம் ஏற்பட்டு விட்டதால் உதவி செய்வதற்காக இந்த எம்பிஏ பட்டதாரி தம்பதிகள் காலை நேரத்தில் கடையில் வந்து வேலை செய்து வருவதாகவும் கூறினர். 

மேலும் விற்பதற்காக உணவுகளை பணிப்பெண்ணின் கணவர் அன்றாடம் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறனர். இவர்களின் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்காக இந்த தம்பதிகளின் உதவிய வருவது மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

இதனை உடனடியாக தீபாளி தனது சமூக வலைதளத்தில் இவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இது தற்போது வைரல் ஆகியுள்ளது. இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் இதற்கு லைக் கொடுத்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.