அடுத்தவள் கணவனுடன் கல்யாணம் செய்யாமலேயே குடித்தனம்! கவிஞர் தாமரை நடுத்தெருவுக்கு வந்த கதை!

ஸ்டெர்லைட் சமூக போராளியான முகிலனை சமூகவலைத்தளங்களில் கவிஞர் தாமரை "பெண்பொறுக்கி" என்று தரைகுறைவாக பேசியதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கடுமையாக போராடிய சமூக செயற்பாட்டாளர்களுள் முகிலன் ஒருவர். 140 நாட்களாக காணாமல் போயிருந்த இவர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் இவர் மீது ஒரு பெண் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டில் இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ள கவிஞர் தாமரை மீண்டும் ஒருமுறை சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் முகிலனை பற்றி தரைக்குறைவாக பதிவு செய்துள்ளார். முகிலனை பற்றி தாமரை, "நீங்க புது போராளி போல; போராளி வேடம் பூண்டு பெண் பொறுக்குபவர்களை நாங்கள் பார்த்து விட்டோம். 

பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு தலைமறைவாகி நீண்ட நாட்கள் பின்னர் வெளியே வந்திருக்கும் முகிலன் அண்ணனுக்கு நீங்கள் மாலை போடுங்கள். எங்களிடமிருந்து செருப்புதான் வரும்" என்று தரக்குறைவாக பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் தாமரையை கிழித்து வருகின்றனர். "நீங்கள் இன்னொருத்தரின் கணவர் என்று தெரிந்து கொண்டே ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தினீர்களே;அதுக்கு என்ன நியாயம்" என்று தாமரையை எதிர்த்து பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.