பேரு பெத்த பேரு! ஆனா சம்பளம் கொடுக்குறது இல்ல! லைக்காவை சீண்டும் சப்டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனக்கு சம்பளத்தை சரியாக தரவில்லை என்று அதிரடியாக கூறுகிறார் சப்டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், எந்திரன் 2.0 திரைப்படங்களை  லைகா நிறுவனம் தயாரித்தது.  இந்த படத்திற்கான சப்-டைட்டில் பணியை செய்தவர் ரேக்ஸ்.

இவருக்கான சம்பள பணத்தை  இன்னும் லைகா நிறுவனம் தரவில்லை என்று இவர் புகாரில் கூறியுள்ளார். 

சப்டைட்டிலிஸ்ட ரேக்ஸ்  தன்னுடைய சம்பள பாக்கியை பெறுவதற்காக லைக்கா நிறுவனத்தை பலவிதமாக அணுகியுள்ளார் . முதலில் அவர்களுக்கு கால் செய்து உள்ளார்.  அவர்கள்  அவருக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனை அடுத்து அவர்களுக்கு இமெயில் மூலமும் மெசேஜ் மூலமும் தன்னுடைய சம்பள பணத்தை கேட்டு உள்ளார் . அதற்கும் அந்த நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதனை அடுத்து  லைகா நிறுவனத்திடம் நீங்கள் சம்பள பாக்கியை எனக்கு தராவிடில் நான் இதனை என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு லைக்கா நிறுவனம் தரப்பில்  நீங்கள்  எந்திரன் திரைப்படத்திற்கு  சம்பளம் பெறவில்லை என்பது உண்மையா ? உண்மையாக இருப்பின் நாங்கள் அதை கண்டிப்பாக விசாரிக்கிறோம் என்று கூறினார்கள் . ஆனால் அதற்குப் பின்னும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை  என்று கூறுகிறார் ரேக்ஸ்.

இதற்கு ரேக்ஸ் அவர்கள் , நான் ஏன் பொய் கூற வேண்டும் . நான் இந்த சம்பள பணத்தை எனக்காக கூட கேட்கவில்லை . எனக்காக ஒரு குழுவினர் வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு  சம்பள பணத்தை நான் அளிக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

எந்திரன் மற்றும் எந்திரன் 2.0  என்ற திரைப்படங்களுக்கான  சம்பள பணத்தை சப்டைட்டிலிஸ்ட ரேக்ஸ்  பெறவில்லை என்பது சினிமா வட்டாரத்தில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.