போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடிக்கு பெற்றோர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியில் தத்தளித்த காதலன் - காதலி!

இரணியல் மற்றும் குலசேகரம் பகுதிகளில் இரண்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவமானது நேற்று அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இரணியல் பகுதிக்கு அருகே பொட்டல்குழி என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் கவிதா. கவிதாவின் வயது 23. இன்ஜினியரிங் படிப்பை முடித்த கவிதா கோவையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் திங்கள்சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கவிதாவுக்கு கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய கார்த்திக் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. 

சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று கவிதா காணாமல் போனார். வேலை முடித்த பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த கவிதா தன் காதலனுடன் இரணியல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தாங்கள் காதலித்து வந்தோம் என்றும் தற்போது ரகசியமாக திருமணம் புரிந்து கொண்டோம் என்றும் கூறியுள்ளார். காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.

இதேபோன்று குலசேகரத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குலசேகரத்திற்கு அருகே பொன்மனை பெருவழிகடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா பானு. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு அந்தப் பகுதிக்கு அருகே உள்ள  காவஸ்தளத்தை சேர்ந்த மனாப் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது காதலாக மாறிய உடன் தன் வீட்டில் ஆயிஷா பானு தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் வீட்டில் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயிஷா திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். தன் காதலனுடன் குலசேகரம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இருவரும் காதலித்து வருவதாகவும் தங்களை எப்படியாவது சேர்த்து வைத்து விடுமாறும் காவல்துறையினரிடம் ஆயிஷா முறையிட்டுள்ளார்.

குலசேகரம் காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தி காதல் ஜோடியை சேர்த்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவங்களானது இரணியல் மற்றும் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.