ரயில் நிலையத்தில் காதல் ஜோடி உல்லாசம்! கண்டுபிடித்து முத்தம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!

ரயில் நிலையத்தில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை கண்டுபிடித்து அந்த பெண்ணிடம் முத்தம் கேட்ட ரயில்வே ஊழியருக்கு பரிதாபமான நிலை ஏற்பட்டது.


   சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் எப்போதும் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு அங்கு காதல் ஜோடிகளும், கள்ளக் காதலர்களும் வரம்பு மீறுவது வழக்கம். இப்படி வரம்பு மீறும் ஜோடிகளை கண்டுபிடித்து பணம் பறிக்கும் கும்பலும் அங்கு உண்டு. இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த காதல் ஜோடிகள் தரமணி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

   பறக்கும் ரயில் நிலையத்தின் இரண்டாவது புளோரில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு அந்த காதல் ஜோடி அங்கு வரம்பு மீறி சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை நோட்டமிட்ட ரயில் நிலைய லிஃப்ட் ஆப்பரேட்டர் லூகாஸ் என்பவர் நேராக சென்று காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்தார். பிறகு காதல் ஜோடியை ரயில் நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் லூகாஸ்.

   அங்கு புக்கிங் கிளார்க்காக இருககும் லோகேஷ், என்பவன் காதலனை பிடித்து வைத்துக் கொண்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதே சமயம் லூகாஸ் என்பவன் காதலியை தனியாக அழைத்துச் சென்று வீட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்த காரணத்தினால் பலாத்காரம் செய்ய லூகாஸ் முயன்றுள்ளான்.

  லூகாசிடம் இருந்து தப்பி ஓடிய அந்த பெண் நேராக காவல் நிலையம் சென்று ரயில் நிலையத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லூகாஸ் மற்றும் லோகேசை கைது செய்து வீசாரித்து சிறையில் அடைத்தனர். வரம்பு மீறிய காதல் ஜோடியிடம் வரம்பு மீறி பலாத்காரம் செய்ய முயன்று ரயில்வே ஊழியர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.