மார்பிங் விவகாரம்! இளம் காதல் ஜோடி தற்கொலை! விசிக பிரமுகர் சரண்! வழக்கில் திருப்பம்!

சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி அமைந்துள்ளது. இதையடுத்து மந்தாரக்குப்பம் என்னும் கிராமத்தில் உள்ள குக்கிராமமான எ. குறவன் பாளையத்தை சேர்ந்தவர் ராதிகா. இவரின் வயது 22. இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

வடலூர் அருகே பார்வதிபுரத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராதிகாவின் தாய் மாமன் ஆவார். மேலும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததால் இவர்களுக்கு திருமணம் செய்து முடிக்க உறவினர்கள் எண்ணி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிறைய பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற இளைஞன் ராதிகாவை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளங்களில் அப்லோடு செய்துள்ளார்.

சில தினங்கள் கழித்து அந்த ஆபாச படத்தை ராதிகா பார்த்து மனமுடைந்தார் பின்னர் தன் வீட்டிலுள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை அறிந்த அவரது தாய்மாமனான விக்னேஷ், புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சம்பவத்தினை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆபாச படத்தை அப்லோடு செய்தவர் வேறு சமூகத்தினர் என்பதனை கண்டுபிடித்துள்ளனர். இதனால் தக்க காவல்துறை பாதுகாப்பை அப்பகுதியில் உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஒரு காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு ராதிகாவின் முகநூல் அக்கவுன்டில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அப்லோட் செய்து இருந்தார். இதைப்பார்த்த பிரேம்குமார் கேவலமாக இருப்பது போன்று கமெண்ட் செய்துள்ளார்.

இதனைப் பொறுத்துக் கொள்ளாத ராதிகா அவரிடம் அநாகரீகமான வார்த்தையை உபயோகித்து சண்டையிட்டுள்ளார். இந்த நிகழ்விற்காக பிரேம்குமார் ராதிகாவை பழிவாங்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் யூகிக்கின்றனர்.

பிரேம்குமார் நேற்று ஒரு மாநில கட்சியை சேர்ந்த நபர்களுடன் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவரிடம் 20 நிமிடத்திற்கு மேற்பட்டு தனி அறையில் விசாரணை நடந்தது. பின்னர் அவரோடு அவர் தந்தை மற்றும் சித்தப்பாவை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து சாதித்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்த துயர சம்பவமானது நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.