ஐதராபாத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஜோடிக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெற்றது.
பெற்றோர் எதிர்ப்பால் விஷம் குடித்த காதல் ஜோடி! மருத்துவமனையில் நிகழ்ந்த அதிசயம்!
ஐதராபாத்தை அடுத்த
விகாராபாத் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் முகமது நவாஸ். இவர் அதே நகரத்தைச் சேர்ந்த
ரேஷ்மா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் பெண்ணின்
பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் காதலுக்கு ஒப்புதல்
கோரி ரேஷ்மா தொடர்ந்து இறைஞ்சியும் பெற்றோர் இறங்காததால் ரேஷ்மா கடும் மன
உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விளைவு அவர் தற்கொலை முடிவுக்கு வந்தார்.
கடந்த 8-ஆம் தேதி
பூச்சி மருந்து குடித்த ரேஷ்மாவின் நிலை கவலைக்கிடமானது. இதனை சற்றும் எதிர்பாராத
ரேஷ்மாவின் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர்.
தகவலறிந்து நவாசும்
மருத்துவமனைக்கு விரைந்தார். ரேஷ்மா குடித்த பூச்சி மருந்து பாட்டிலை
பார்த்துவிட்டுத் தருவதாக அவர் மருத்துவர்களிடம் கேட்டாரம். அப்போது சிறிதும்
விபரீதத்தை யோசிக்காத மருத்துவர்கள் அந்த பாட்டிலைக் கொடுத்தனர். ஆனால் நவாஸ்
திடீரெனெ அதில் எஞ்சியிருந்த பூச்சி மருந்தைக் குடித்ததால் அதிர்ச்சியடைந்த
மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சையைத் தொடங்கினர்.
கெடுதலிலும் ஒரு நன்மை
என்பது போல அந்த விஷத்தால் தான் ரேஷ்மாவின் பெற்றோருக்கு இருவரின் காதலின் உறுதி
புரிந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு
செய்தனர்.
இருவருக்கும் உடல் நிலை
சரியானதும், மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நெருங்கிய
உறவினர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. காதலுக்கு
மரியாதை செய்த நவாஸ் - ரேஷ்மா தம்பதியரை மருத்துவமனையில் இருந்த அனைவரும்
வாழ்த்தினர்.