முதலில் நீ..! பிறகு அவன்! காதலியை ஆற்றங்கரையில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய விபரீத காதலன்! கடலூர் சம்பவம்!

இளம்பெண் ஒருவர் மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் காதலன் உட்பட 3 பேர் கைதாகியிருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காட்டுமன்னார்கோவில் என்னுமிடத்திற்கு அருகில் மேல ராதாம்பூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மாதவன் என்ற 17 வயது இளைஞன் வசித்து வருகிறான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சம்கொல்லை என்னும் பகுதியில் விசித்ரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். மாதவனுக்கும், விசித்ராவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அதே பகுதியில் வசித்து வரும் தன்னுடைய நண்பர்களான விக்னேஷ், சூர்யா பிரகாஷ் ஆகியோரிடம் காதலைப்பற்றி மாதவன் கூறியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் மாதவன் ஆசை வார்த்தைகள் கூறி விசித்திராவை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த செய்தியை அறிந்து கொண்ட விக்னேஷ் மற்றும் சூர்யபிரகாஷ் ஆற்றங்கரைக்கு சென்று விசித்திராவை மிரட்டியுள்ளனர். பின்னர் 3 பெரும் சேர்ந்து கொண்டு விசித்திராவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

வீட்டிற்கு அழுது கொண்டு சென்ற மாணவி தன் அண்ணனிடமும், பெற்றோரிடமும் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் அண்ணன் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து 3 பேரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். விக்னேஷ் மற்றும் சூரியபிரகாஷ் ஒரே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.