கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி! உல்லாசம் அனுபவிக்க கேட்டதை கொடுக்காததால் கள்ளக் காதலன் செய்த பயங்கரம்!

கள்ளக்காதலியை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. சித்தூருக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பானு. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்துவந்ததால் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

2 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழும் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் ஜே.சி.பி வாகன ஓட்டுநரான ஹரி என்பவர் வசித்து வந்துள்ளார். இருவருக்குமிடையே காலப்போக்கில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்நிலையில் ஹரி தனக்கு வேண்டும் போதெல்லாம் பானுவிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு இருந்தார். பானுவும் தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு செலவுக்கு வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கியுள்ளார். 

எந்த பணத்தையும் திருப்பி தராமல் ஹரி மீண்டும் பானுவிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த பானு தன் பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டதால் வழக்கினை அவர்கள் திரும்ப பெற்றனர்.

2 மாதங்கள் முன்பு பணத்தை முழுவதுமாக திருப்பி தருவதாக கூறி ஹரி பானுவை ராமாபுரத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த பானுவை கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் பானுவை மண்ணிலும் புதைத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று அப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் தற்போது ஹரி தான் கொலை செய்துள்ளார் என்பதை கண்டறிந்து உள்ளனர். இந்த சம்பவமானது சித்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.