காதலியை கொன்று சடலத்தை சமைத்து தாய்க்கு விருந்தாக்கிய கொடூர காதலன்! பதற வைக்கும் சம்பவம்!

காதலியை கொலை செய்து இளைஞர் ஒருவர் நைஜீரியா நாட்டில் நரபலி கொடுத்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நைஜீரியா நாட்டில் 48 வயதான அடீகோ என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் ஒவொலாபி. ஒவொலாபியின் கல்லூரி தோழியின் பெயர் டேலி. டேலியின் வயது 22‌. ஒவொலாபி டேலியை கடத்தி சென்று கடத்தி சென்று போதைக்கு அடிமையாக்கியுள்ளார்.

அதன் பின்னர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் காதலியின் உடலை ஒவொலாபி, ஃபிலிப் என்ற பாதிரியார் சுயமாக நடத்தும் தேவாலயத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

அங்கு இருவரும் இணைந்து கொண்டு டேலியின் உடலை துண்டு துண்டாக நொறுக்கியுள்ளனர். ஒவொலாபி பணக்காரர் ஆக வேண்டுமென்றால் காதலியின் இறைச்சியை சாப்பிட்டாக வேண்டும் என்று பாதிரியார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஒவொலாபி காதலியின் இறைச்சியை சமைத்து தன்னுடைய தாயாருக்கு விருந்து படைத்துள்ளார். இந்நிலையில் நைஜீரியா நாட்டின் காவல்துறையினருக்கு இதுபற்றிய தகவல் தெரியவந்தது. 

உடனடியாக ஒவொலாபி மற்றும் அவருடைய தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒவொலாபியின் தாயாரான அடீகோ தான் சாப்பிட்டது டேலியின் இறைச்சி என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.

ஆட்டிறைச்சியை விருந்தாக படைக்க உள்ளதாக பாதிரியார் அழைத்ததன் பேரில் மட்டுமே தான் அங்கு சென்று சாப்பிட்டதாக அடீகோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

டேலி, லாகோஸ் மாநில பல்கலை கழகத்தில் கடைசி ஆண்டு பயின்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரியின் கடைசி மாதத்தில் அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சம்பவத்தை அறிந்த உடன் தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கத்திடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவமானது நைஜீரியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.