காதலிக்கும் போதே கர்ப்பம்..! பிரசவ வலி! நர்மதாவுக்கு YouTube பார்த்து பிரசவம் பார்த்த காதலன்! சவுக்குத் தோப்பு சம்பவம்!

இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு பிரசவம் பார்த்துள்ள சம்பவமானது கும்மிடிபூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டியில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 27. இவர் தனியார் கேஸ் கம்பெனியில் சப்ளை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

அவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் நர்மதா என்ற பெண்ணுடன் சௌந்தர் காதல் வயப்பட்டுள்ளார். நர்மதா கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். நர்மதா கர்ப்பமானார். இந்த விவகாரத்தை இருவரும் இருவரது வீட்டிலும் தெரிவிக்காமல் மறைத்து வந்தனர். இந்த மாத தொடக்கத்தில் நர்மதா 8 மாதங்கள் கர்ப்பமானார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நர்மதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தன்னுடைய காதலரான சௌந்தரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சௌந்தர் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் யூடியூப் சேனலை பார்த்து தன்னுடைய காதலிக்கு பிரசவம் பார்ப்பதை தொடர்ந்துள்ளார்.

பிரசவத்தின்போது குழந்தை எடக்கு முடக்காக மாட்டிக்கொண்டது. அப்போது வலுக்கட்டாயமாக சௌந்தர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் கை உடலிலிருந்து துண்டானது. மேலும், குழந்தையை வெளியே எடுத்த பிறகு பிளேடால் தொப்புள்கொடியை அறுத்துள்ளார்.

அப்போது நர்மதாவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன சௌந்தர் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் நர்மதாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவரை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இறந்த நிலையில் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். இந்த சம்பவமானது கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.