சண்முகப்பிரியாவை கர்ப்பமாக்கிவிட்டு ஐஸ்வர்யாவை மனைவியாக்கிய லெனின்..! குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட விபரீதம்! தஞ்சை பரபரப்பு!

காதலி அளித்த புகாரினால் மனம் விரும்பிய காதலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஒரத்தநாடில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லெனின் என்ற 29 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஒரு கூல்ட்ரிங்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே இடையாத்தி கிராமத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரியான சண்முகப்பிரியா என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் சண்முகப்பிரியாவை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் சண்முகப்பிரியா கர்ப்பமாகியுள்ளார். பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகப்பிரியா கூறியதற்கு லெனின் தட்டிக்கழித்து வந்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்னர் சண்முகப்பிரியா புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு முதுகலை பட்டதாரியான ஐஸ்வர்யா என்ற பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த திருமணம் குறித்து செய்தியானது சண்முகப்பிரியாவிற்கு கிடைத்துள்ளது.

உடனடியாக அவர் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில், தனக்கும் லெனினுக்கும் இடையே ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் மீது புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடன் லெனினை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டுள்ளார்.

தன்மீது சண்முகப்பிரியா அளித்த புகாரை தெரிந்துகொண்ட லெனின், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். உடனடியாக லெனினை மீட்ட உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். இதற்கிடையே சண்முகப்பிரியா பிரசவ வலி ஏற்பட்டதால் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி லெனின் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இன்று காலையில் சண்முகப்பிரியா வேரோடு மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவமானது ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.