தேனி மாவட்டம் போடியில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலனை மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராத்திரி தனியாத்தான் இருக்கேன்..! வர்றியா? வளர்மதி கூப்பிட்டு ஆசையாக ஓடிய ராஜா..! மறுநாள் சடலமாக கிடந்த பயங்கரம்!
கேரள மாநிலத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜா கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாய் வளர்மதியும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். வளர்மதிக்கென ஒரு ஏலக்காய் தோட்டம் உள்ளது. அதை பார்வையிட செல்லும்போது ராஜாவின் காரில் வாடகைக்கு செல்வது வழக்கம்.
இருவரும் உறவுகளை பிரிந்து வாழும் நிலையில் இவர்களுக்கிடையே கெமிஸ்ட்ரி உருவானது. இதை அடுத்து தங்களுடைய பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள காதல் மலர்ந்தது. பிறகு அடிக்கடி இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே நடைபெற்ற ஒரு வன்முறை சம்பவத்தில் ராஜா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை விசாரிக்க வளர்மதி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜா வளர்மதியுடன் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் தன்னுடன் சந்தோஷமாக இருக்கச் சொல்லி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வளர்மதி ராஜாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என 2 நாட்களுக்கு முன்னர் இரவு வளர்மதி வீட்டிற்குள் நுழைந்தார் ராஜா.
அப்போது அவர் முகத்தில் திடீரென மிளகாய் பொடி தூவினார் வளர்மதி. இதை அடுத்து நிலைகுலைந்த ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளினார் வளர்மதி. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா துடிதுடித்து இறந்து போனார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கைது செய்தனர். ஆற்றில் போகும் தண்ணியை கொஞ்சம் குடித்துவிட்டு போகாமல் ஆற்றையே சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் கள்ளக் காதலர்களுக்கு இதுபோல் துக்கமான நிகழ்ச்சி நடந்துவிடுகிறது.