எனக்கு 52 அவளுக்கு 35..! திடீர்னு புருசன பார்க்க போறேன்னு சொன்னா..! அதான் அப்படி செஞ்சிட்டேன்..! அதிர வைத்த கள்ளக்குறிச்சி பெயின்டர்!

தன்னுடன் வாழ்ந்து வந்த கள்ளக்காதலி கணவரை பார்க்க வேண்டும் என அடம்பிடித்ததால் அநியாயமாக கொல்லப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்றுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லந்தல் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்ற திருமணம் ஆகாத பெயிண்ட்டர் பெங்களூருவில் தங்கி பணிபுரிகிறார். சாம்ராஜ்பேட்டையில் அருண் என்பவரின் மனைவி சுவேதாவுடன் பெயிண்ட்டர் சுபாஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருண் சுவேதா தம்பதிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

வீட்டில் அருண் இல்லாத சமயங்களில் அடிக்கடி சுவேதாவை சந்திப்பதும், அவருடன் உல்லாசமாக இருப்பதுமாக பொழுதை கழித்து வந்துள்ளார் சுபாஷ். இதற்கிடையே கணவரை விட்டுவிட்டு வந்துவிடுமாறு மூளைச் சலவை செய்த சுபாஷ், சுவேதாவை சொந்த ஊரான கல்லந்தல் கிராமத்துக்கு அழைத்து வந்துவிட்டார்.

சுபாசின் இந்த முடிவுக்கு அவரது தாயார் லட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சுபாஷ், சுவேதா இருவருமே மதுகுடித்துவிட்டு கும்மாளம் அடித்துள்ளனர். இந்நிலையில் 2 குழந்தைகள், கணவரை பிரிந்து வந்த சுவேதாவுக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமோ என நெஞ்ச பதைபதைக்க மீண்டும் கணவரிடமே சென்றுவிடுவதாக சுபாஷிடம் கூறியுள்ளார் சுவேதா. இதனால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் அம்மிக்கல்லை போட்டு சுவேதாவை கொன்றுவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சுவேதா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்து விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாக தந்தார். கள்ளக் காதல் விவகாரத்தில் அருண் என்பவர் மனைவியை இழக்க, 2 குழந்தைகள் தாயை இழக்க, மற்றொரு புறத்தில் சுபாஷ் சிறைக்கு செல்ல, மகனை பிரிந்து தவிக்கிறார் தாய் லட்சுமி. ஒருவருடன் ஏற்படும் காதல் புனிதமாகிறது. மற்றொருவருடன் ஏற்படும்போது குற்றமாகிறது.