மலை உச்சியில் இருந்து குதித்த காதல் ஜோடி! பாறை இடுக்குகளுக்குள் சிக்கிய கொடூரம்! காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த மக்கள்! போளூர் பரபரப்பு!

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலையில் புதுப்பாளையம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நீலாம்பரி. விவரம் அருண்குமார் பணிபுரியும் அதே ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

ஒன்றாக பணிபுரியும் காலத்தில் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தனர். சில மாதங்களிலேயே இவர்களுடைய காதல் செய்தியானது இருவீட்டாருக்கும் தெரியவந்தது.

இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடுமையாக மனமுடைந்தனர். போளூரிலுள்ள சம்பத்கிரி மலை பகுதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றனர்.

மலைப்பகுதியிலிருந்து இருவரும் கீழே குதித்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பாறைகளில் விழுந்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறு காயங்களுடன் இளம் காதல் ஜோடியை காப்பாற்றினர். நீலாம்பரி தங்களுடைய தோள்களில் சுமந்து பொதுமக்கள் மலையடிவாரத்திற்கு அழைத்து வந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் திருவண்ணாமலை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். சமரசப்படுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவமானது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.