சகோதரர் முறை இளைஞருடன் இளம்பெண் காதல்! கண்டுபிடித்த பெற்றோர்! பிறகு அரங்கேறிய திடுக் சம்பவம்!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் கோபி என்ற இளைஞர் வசித்து வந்தார். இவருடைய வயது 22. இவருடைய நெருங்கிய உறவினரின் பெயர் லாவுத்யா சிந்து. சிந்துவின் வயது 21. இருவருமே சின்னஞ்சிறு வயதிலிருந்தே நெருக்கமாக இருந்தனர். காலம் செல்ல செல்ல நெருக்கமானது காதலாக மாறியது. பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர், தங்களது காதலை இருவரும் தங்கள் வீட்டில் கூறியுள்ளனர். ஆனால் உறவு முறையில் இருவரும் சகோதர சகோதரி என்பதால் இதனை கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர். மேலும் இருவரையும் பிரித்து வைத்தனர்.

இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர். வயல்வெளிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இருவரும் தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரின் சடலங்களையும் கண்ட உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.