3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட லாஸ்லியா! மேடையில் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! கண்ணீர் விட்ட தாயார்!

3-வது இடத்தை பெற்றதற்காக லாஸ்லியாவின் தாயார் கண்ணீர் விட்ட சம்பவமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது நேற்று நிறைவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனின் வெற்றியாளராக முகென் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கடைசி களத்தில் முகென், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகியோர் இருந்தனர். ஷெரின் 4-வது இடத்தை பெற்று வெளியேறினார். அதன் பின்னர் முக்கோணமாக போட்டி அமைந்திருந்தது.

ஆனால் எதிர்பாராவிதமாக லாஸ்லியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். கமல்ஹாசன் இதனை அறிவித்தவுடன் லாஸ்லியாவின் தாயார் கண்ணீர் சிந்தினார். கமல்ஹாசன் கிளாஸ் இந்தியாவிடம் அவருடைய அனுபவம் குறித்து கேட்டபோது, "நான் ஃபைனல்ஸ் வருவன்னு எதிர்பார்க்கல. நடுவில் மிகவும் சோதனையான காலங்கள் பல இருந்தன. எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. நான் இங்க வரணும்னு கவின் பிளான் போட்டான். தனியாக நன்றி சொல்லணும்னு அவசியம் இல்ல" என்று கூறினார்.

அப்போது உங்கள் தாயாருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கமல் கூற அது தேவையில்லை என்று லாஸ்லியா அதிரடியாக தெரிவிக்க லாஸ்லியா தாயார் கண்ணீர் விட்டார். பிறகு லாஸ்லியாவின் தாயாரிடம் கமல் கேட்டறிந்த போது, "அவ ஃபைனல்ஸ் வருவானு நாங்க யாரும் எதிர்பார்க்கல. இப்போ பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு" என்று கூறி அழுதார்.

இந்த சம்பவமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சோகத்தை ஏற்படுத்தியது.