பெற்ற தாய் அருகே அமர்ந்து கொண்டு லாஸ்லியா செய்த செயல்..! டென்சன் ஆன கவின் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும் , அதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அவர் செய்யும் செயல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .


இந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கவின் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே செல்லும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் லாஸ்லியா கதறி அழுதார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு லாஸ்லியா தனது ரசிகர்களுடன் நடனமாடிய காட்சியும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளரான அபிராமி நாய் குட்டியை கொஞ்சும்போது , அவருடன் அருகேயிருந்த லாஸ்லியா நாய்க்குட்டியை பார்த்து பயந்த காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் தனது தாயை அருகில் வைத்துக்கொண்டு லாஸ்லியா , ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பாட்டு பாடி நடனம் ஆடியுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், லொஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் கவின் முகத்தை பார்ப்பதற்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் லாஸ்லியா ரசிகர்களுடன் பாட்டு பாடி நடனம் ஆடி ஜாலியா இருந்து வருகிறார் என்று கவின் ரசிகர்கள்  கமெண்ட் செய்து  வருகின்றனர் .