பிக்பாஸ்க்கு பிறகு முதல் முறையாக சந்தித்துக் கொண்ட கவின் - லாஸ்லியா..! ஆனால்..? புகைப்படத்தால் எழும் கேள்வி..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று முடிவடைந்தது.


இந்நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமான கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா ஆகியோரும் போட்டியாளராக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்த சீசனில் இவர்களது காதல் தான் மிகப் பிரபலமாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவு பெற்ற நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் ரசிகர்களின் கண்களில் படாமல் இருந்தனர். இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர் .

அப்போது அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இருவரும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். இதனால் அவர்களுக்குள் ஏதும் ஊடலா என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.