லாரி ஓனரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்! அப்புறம் நடந்தது தான் திருப்புமுனை சம்பவம்!

லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற காவல்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரில் மாதவரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் ஒரு லாரி உரிமையாளராவார். தொழில் போட்டி காரணமாக அசோக் குமாரின் மீது காவல் நிலையத்தில் புகாரொன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பரமேஸ்வரன் என்பவர் விவரங்களை சேகரித்து வந்தார்.

பரமேஸ்வரன் அசோக்குமாரிடம் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அசோக்குமார் அதனை மதிக்காத காரணத்தினால் அவருடைய அலுவலகத்திற்கே பரமேஸ்வரன் சென்றுள்ளார். அங்கு அசோக்குமாரிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு பரமேஸ்வரன் மிரட்டியுள்ளார். அசோக்குமார் தன் மீதுள்ள குற்றங்களை ஒப்பு கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் மாதவரம் காவல் நிலையத்தில் பரமேஸ்வரன் மீது புகார் அளித்தார்.

பரமேஸ்வரன் பற்றி விசாரணை நடத்தியதில் அவர் குற்றவழக்கில் சரிவர ஈடுபடாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறிது நாட்களுக்கு முன்னர் தான் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது அம்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி  வருகிறார். பணம் பறிக்கும் நோக்கத்தில் பரமேஸ்வரன் செயல்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த காவல்துறையினர் பரமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.