சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி..! கவனிக்காமல் நேராக சென்று சொறுகி பற்றி எரிந்த பஸ்..! பக்தர்கள் 45 பேரின் நிலை?

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டால் சம்பவமானது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 45 சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் முடித்த பின்னர், ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு சென்றுள்ளனர். ஆந்திர‌ மாநிலத்திலுள்ள நீலவாடசா என்னும் பகுதிக்கு அருகே பக்தர்கள் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது சாலையோரத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராவிதமாக வேன் மோதியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பக்தருக்கும், எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அனைவரும் பேருந்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே பேருந்து தீப்பிடித்து  எரிந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வெளியேறியதால் பேருந்தில் இருந்த 45 பேரும் சிறிய காயங்களுடன் தப்பினர்.