அப்பளம் போல் நொறுங்கிய சுமோ! 6 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம்! திருச்சி சோகம்!

நாமக்கல் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரி ஆனது  சி weன்னவேப்பநத்தம் என்ற பகுதியில் நேற்று இரவு சுமார் 11:15 மணிக்கு வந்தடைந்தது. இந்த சமயத்தில் லாரி வந்து கொண்டிருந்த பொழுது எதிரே டாட்டா சுமோ ஒன்று வந்து கொண்டிருந்தது. 

வேகமாக வந்த டாடா சுமோ காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 6 பேர் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் சுக்குநூறாக உடைந்து போனது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தின்போது காரில் பயணித்த சசிகுமார் , சதீஷ்குமார் , ஜித்தேந்திரன், பப்லு , பேச்சின் குமார் , தர்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு சிக்கியிருந்த ஆறுபேர் அது உடலையும் கைப்பற்றினர்.

பின்னர் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின்போது காரில் பயணித்த 6 பேரும் திருச்சியின் பக்கத்தில் உள்ள கிராமத்தில் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. அதாவது தர்மா என்பவர் பீகாரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கான்டிராக்ட்டர்களை எடுத்து அதற்கு தேவையான ஆட்களையும் அழைத்துவந்து தர்மா புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு டைல்ஸ் ஒட்டி தருவதை தன்னுடைய தொழிலாக செய்துவருகிறார். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் இருந்து மூன்று பேரையும் சசிகுமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலை செய்திருக்கிறார். டைல்ஸ் ஒட்டும் பணியை முடித்துவிட்டு அவர்கள் 6 பேரும் இணைந்து காரில் பயணித்து வந்துள்ளனர்.

அப்படியாக வரும் பொழுதுதான் அதி வேகமாக வந்த லாரி இந்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் லாரி டிரைவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிவிட்டார் போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த வடமாநிலத்தை அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் அளித்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.