அவனை நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்! பெண் டாக்டரை சிதைத்தவனின் தாயார் ஆவேசம்! அதிர்ச்சி காரணம்!

ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் (ORR) அமைந்து உள்ள டோல் பிளாசா அருகே 25 வயதான பெண் கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுனர்கள் 4 பேர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு லாரி ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு கிளீனர்கள் ஆகியோரால் கடந்த புதன்கிழமை இரவு கதற கதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் அந்தப் பெண்ணின் சடலத்தை ஷாட்நகர் நகருக்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றி தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். 

பாதிக்கப்பட்டவரின் எரிந்த உடல் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது. முகமது ஆரிப், சிந்தகுந்தா சென்னகேஷவுலு, ஜொல்லு சிவா மற்றும் ஜொலு நவீன் ஆகிய 4 பேரும் இணைந்துதான் அந்தப் பெண் மருத்துவரை வைத்து இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர்களில் ஒருவரது தாயார் அவன் எனக்கு மகனே கிடையாது ..

அந்த மிருகத்தை தூக்கிலிடுங்கள் அல்லது நடுரோட்டில் சுட்டுத் தள்ளுங்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.