கள்ளக்காதலனை நம்பி முந்தி விரித்த பெண்! கர்ப்பமான பிறகு நேர்ந்த விபரீதம்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உறவு பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த லாரி டிரைவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புளியங்குடி அருகே தலைவன்கோட்டை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 39. இவர் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தன் உறவுக்கார பெண் ஒருவருடன் நெருக்கமாக உதயகுமார் பழகி வந்துள்ளார். பின்னர் நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணிடம் "எப்பாடுபட்டாவது உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன்; பயப்படாதே" என்று ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் உல்லாசத்தை அனுபவித்துள்ளார்.

சில மாதங்களில் அந்த உறவுக்கார பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். இதனை அறிந்த உதயகுமார், இந்த செய்தியை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அவ்வாறே இருந்த அந்த பெண்ணுக்கு, திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரின் உறவினர்கள், அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உதயகுமார் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

உடனே,பெண்ணின் பெற்றோர், உதயகுமார் மீது புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் உதயகுமாரை கைது செய்து விசாரித்ததில், தன் மீதுள்ள தவறை உதயகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். 

இதற்கிடையே அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானது நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவமானது தலைவன்கோட்டை கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.