இயற்கை உபாதைனு சொல்லிட்டு போனான்..! நடு ரோட்டில் கவிமணிக்கு ஏற்பட்ட பயங்கரம்! பெரம்பலூர் அதிர்ச்சி!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவன் மீது லாரி மோதியதில், சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்த சம்பவமானது குன்னத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தமணி. இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவிமணி என்ற 16 வயது மகனும், அர்ச்சனா என்ற 12 வயது மகளும் உள்ளனர்.

கவிமணி அப்பகுதிக்கு அருகேயுள்ள மேல்மாத்தூரில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வருகிறது மதன் நடத்தப்படவுள்ள 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். நேற்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிலிருந்து மொபட் எடுத்துக்கொண்டு, வெண்மணி செல்லும் சாலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது தஞ்சாவூரில் இருந்து மினி லாரி ஒன்று பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சாலையை கடக்க முற்பட்ட கவிமணியின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் கவிமணி சில மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அப்பகுதியில் பொதுமக்கள் கவிமணியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கவிமணி உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த அண்ணாநகர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதாவது அரியலூர் பெரம்பலூர் இணைப்பு சாலைக்கு முன்னர் பேரிகேட் அமைத்து தருமாறு பலமுறை மனு அளித்தும் எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால்தான் இதுபோன்ற சாலை விபத்துக்கள் அரங்கேறி வருவதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த குன்னம் காவல்துறையினர் அவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.