விபரீத ஓவர்டேக் முயற்சி! காரில் இருந்த 6 பேரில் 5 பேர் பலி! நாமக்கல் பரிதாபம்!

லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவமானது நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் எனுமிடம் அமைந்துள்ளது. சரவணன், கேசவன், கந்தம்மாள், வசந்தி ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் 1 வயது குழந்தையான பிர்ஜின் பயணம் செய்துள்ளான். குழந்தைக்கு தலைமுடி இறக்குவதற்காகவே காரில் சென்றுள்ளனர்.

கார் மூலம் அப்பகுதியிலிருந்த கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதற்கருகேயுள்ள கபிலர் மலைப்பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். எருமப்பட்டி பகுதியில் காரை ஓட்டி வந்துக்கொண்டிருந்தனர். முன்னே சென்று கொண்டிருந்த லாரியை ராஜேந்திரன் முந்தி செல்ல முயற்சித்துள்ளார். 

அப்போது எதிர்திசையிலிருந்து வந்துகொண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வசந்தி என்ற பெண் உயிருக்கு போராடிய நிலையில் நாமக்கல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவாலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்குப்பதிவு செய்துள்ள எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.