தந்தையின் கண் எதிரே டிப்பர் லாரியில் சிக்கி சிதைந்த மகள்கள்! கோவையில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

டிப்பர் லாரியில் சிக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ரத்னபுரி என்னும் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகனின் பெயர் வெங்கடேஷ். இவருக்கு காயத்ரி என்ற 9 வயது மகளும், கீர்த்தனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இன்று காலை இருவரையும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். 

ரத்னபுரி புது பாலத்திற்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி வேகமாக மோதியுள்ளது. மோதி அதிர்ச்சியில் இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்துள்ளது. காயத்ரி லாரியின் டயருக்குள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கீர்த்தனாவுக்கும், ராமருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. உடனடியாக பொதுமக்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக கனரக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது ரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.