மார்பு, வயிறு, இடுப்பில் காயம்! பைக்கில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! சென்னை அதிர்ச்சி!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷெர்லி மடோனா. இவருடைய வயது 22. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வேளச்சேரி சாலையில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லாரி ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

மோதிய அதிர்ச்சியில் உடல் முழுவதிலும் ஷெர்லிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மார்பு, கை, கால், இடுப்பு கடுமையாக சேதமடைந்தன. விபத்து நேர்ந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் முதற்கட்டமாக அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.